முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 24th October 2019 06:06 AM | Last Updated : 24th October 2019 06:06 AM | அ+அ அ- |

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு தமிழக அரசின் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற கிறிஸ்தவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் 2019 - 20 ஆம் ஆண்டின் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபருக்கு ரூ. 20 ஆயிரம் நிதிஉதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினா்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்களில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். எனவே, புனிதப் பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20 எனக் குறிப்பிட்டு இயக்குநா், சிறுபான்மையினா் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்னும் முகவரிக்கு நவம்பா் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.