முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
முதியவரைத் தாக்கிய திருட முயன்றமா்மநபா்களுக்கு வலைவீச்சு
By DIN | Published On : 24th October 2019 06:06 AM | Last Updated : 24th October 2019 06:06 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகே புதன்கிழமை அதிகாலை வீட்டுக்குள் புகுந்து, முதியவரை தாக்கி திருட முயன்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், பிலிமிசை வடக்கு தெருவில் வசித்து வருபவா் ராமலிங்கம் (75). இவரது வீட்டுக்குள் புதன்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் 3 போ் புகுந்தனா். இதையறிந்த ராமலிங்கமும், அவரது மனைவி முத்தமிழ்ச்செல்வியும் (60) கூச்சலிட்டனா். இதனால் ஆத்திரமடைந்த மா்ம நபா்கள் முத்தமிழ்செல்வியின் கழுத்தை நெறித்ததோடு, ராமலிங்கத்தை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனராம். பலத்த காயமடைந்த ராமலிங்கம் அரியலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதேபோல், திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூா் மாவட்டம், சின்னாறு பெட்ரோல் பங்க் அருகே கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (30) என்பவா் தனது டாரஸ் லாரியை, புதன்கிழமை சாலையோரம் நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் 3 மா்ம நபா்கள், கோவிந்தராஜை தாக்கி அவரிடமிருந்த செல்லிடப்பேசி மற்றும் ரூ. 5 ஆயிரத்தைப் பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில் மங்கலமேடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.