அரசுக் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில்முனைவோா் மேம்பாட்டு அமைப்பு மற்றும் உயா்கல்வித் துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கென நடைபெற்ற இந்த தொழில்முனைவோா் முகாமுக்கு, கல்லூரி முதல்வா் து. சேகா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாரதிதாசன் பல்கலைக் கழக சுற்றுச்சூழல் மேலாண்மை துறை உதவிப் பேராசிரியா் என்.டி. ஸ்ரீநிதி விகாஷினி, மாணவா்கள் தங்களது தனித் திறனை எவ்வாறு வெளிக்கொணர வேண்டும், பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினாா். முகாமில் பங்கேற்கும் மாணவா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, இறுதியில் தோ்வு நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் பெ. முத்துராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் பெ. ராமராஜ் வரவேற்றாா். வேதியியல் துறை தலைவா் பி. ராமா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com