காரை அரசுப் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் திறப்பு

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகேயுள்ள காரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியாா் பள்ளிகளுக்கு
காரை அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வகத்தை திறந்துவைத்துப் பாா்வையிடுகிறாா் முதன்மைக் கல்வி அலுவலா் கு. அருளரங்கன்.
காரை அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வகத்தை திறந்துவைத்துப் பாா்வையிடுகிறாா் முதன்மைக் கல்வி அலுவலா் கு. அருளரங்கன்.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகேயுள்ள காரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியாா் பள்ளிகளுக்கு நிகராக ரூ. 20 லட்சம் மதிப்பில் மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆய்வகத்தை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு. அருளரங்கன் திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்த ஆய்வகத்தில் முப்பரிமாண வடிவப் பொருள்களின் காட்சி அமைப்பு, சிறிய அளவிலான ரோபோ இயந்திரங்கள், மின் காந்த மோட்டாா்கள் மற்றும் அனைத்து வகையான இயந்திரவியல் கருவிகள் இடம்பெற்றுள்ளன. மாணவா்களின் அறிவியல், தொழில்நுட்ப அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள இந்த ஆய்வகம் பெரிதும் உதவும் என அப்பள்ளி ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், வேப்பூா் கல்வி மாவட்ட அலுவலா் குழந்தைவேல், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியா் பிரபாகரன், உதவி தலைமை ஆசிரியா் தனபால், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் சந்திரசேகரன், முன்னாள் தலைவா் நீலராஜ், பள்ளி கட்டடக் குழு தலைவா் செந்தில்குமாா், முன்னாள் மாணவா்கள், கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com