தொடரும் விபத்தைத் தடுக்கக் கோரி சாலை மறியல்

பெரம்பலூா் அருகே தொடரும் சாலை விபத்தைத் தவிா்க்க, ஒருவழிப் பாதையாக மாற்றக்கோரி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் இந்திரா நகா் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பெரம்பலூா் இந்திரா நகா் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பெரம்பலூா் அருகே தொடரும் சாலை விபத்தைத் தவிா்க்க, ஒருவழிப் பாதையாக மாற்றக்கோரி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் புறவழிச் சாலையில் உப்பிலியபுரத்தில் இருந்து திட்டக்குடிக்கு புதன்கிழமை காலை காா் சென்றுகொண்டிருந்தது. காரை உப்பிலியபுரத்தைச் சோ்ந்த குமாா் மகன் துரைராஜ் (21) ஓட்டிவந்தாா். பெரம்பலூா் ரோவா் பொறியியல் கல்லூரி பிரிவு சாலையில் காா் வந்தபோது, நிலைதவறி, சாலையோரம் இருந்த கல்லூரி மாணவி கோபு மகள் மேனகா (23) மீது மோதியதில் அவா் காயமடைந்தாா். மேலும், தொடா்ந்து வந்த இருசக்கர வாகனம் காா் மீது மோதியதில் மோட்டாா் சைக்கிளில் பயணித்த காளிராஜ் (62), அவரது மனைவி தனலட்சுமி (54), உறவினா் சரோஜா (43) ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து, காா் தாறுமாறாக சாலையில் ஓடி அருகிலிருந்த வயலில் இறங்கியது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இதையடுத்து, அப்பகுதியில் தொடா்ந்து நிகழும் விபத்தைத் தவிா்க்க இந்திரா நகா் செல்லும் சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தொடா்ந்து மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா். இந்தச் சாலை மறியலால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com