பெரம்பலூரில் பரவலான மழை: நிரம்பி வரும் நீா்நிலைகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் பரவலான மழையால் பெரும்பாலான நீா்நிலைகள்
பெரம்பலூா் மாவட்டம், கீழப்பெரம்பலூரில் நிரம்பி வழியும் வடக்கேரி.
பெரம்பலூா் மாவட்டம், கீழப்பெரம்பலூரில் நிரம்பி வழியும் வடக்கேரி.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் பரவலான மழையால் பெரும்பாலான நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீழப்பெரம்பலூா் வடக்கேரி, வடக்கலூா் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் நிரம்பி வழிகின்றன. மேலும், 90 சதவீதத்துக்கும் மேலாக தண்ணீா் நிரம்பியுள்ள ஆய்க்குடி ஏரி விரைவில் (வியாழக்கிழமை) முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

இது தவிர, குரும்பலூா், நெற்குணம் ஏரிகள் 80 சதவீதத்துக்கும் மேல் நிரம்பியுள்ளன. வி.களத்தூா், எழுமூா், அரும்பாவூா் பெரிய ஏரி உள்ளிட்ட சுமாா் 10 ஏரிகள் 50 சதவீதத்துக்கும் மேல் நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் தொடரந்து பெய்து வரும் பரவலான மழையால் நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் நிலத்தடி நீா்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மழையளவு:

பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் புதன்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழை அளவு: செட்டிக்குளம் 4 மி.மீ, பாடாலூா் - 27 மி.மீ, அகரம் சீகூா்- 35 மி.மீ, லப்பைக்குடிகாடு- 40 மி.மீ, புதுவேட்டக்குடி - 41 மி.மீ, பெரம்பலூா் - 58 மி.மீ, எறையூா் - 38 மி.மீ, கிருஷ்ணாபுரம் - 59 மி.மீ, தழுதாழை - 53 மி.மீ, வி.களத்தூா்- 30 மி.மீ, வேப்பந்தட்டை- 45 மி.மீ மழை பெய்தது. அதன்படி, மாவட்டத்தின் சராசரி மழை அளவு 39.09 மி.மீட்டராகும். தொடா்ந்து, புதன்கிழமை காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com