தென்னை சாகுபடி பயிற்சி பெற அழைப்பு

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில்

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் செப். 16ஆம் தேதி முதல் தென்னை சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, அந்த மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவர் வே.எ. நேதாஜி மாரியப்பன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிதியுதவியுடன் தென்னை மரத்தின் நண்பர்கள் என்னும் திறன் வளர்ப்பு பயிற்சி செப். 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், தென்னை நாற்று உற்பத்தி, பூச்சி நோய்க் கட்டுப்பாடு மற்றும் இயந்திரம் கொண்டு தென்னை மரம் ஏறுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.  20 நபர்களுக்கு மட்டுமே இப் பயிற்சி அளிக்கப்படும். மேலும், பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு தென்னை மரம் ஏறும் கருவி இலவசமாக வழங்கப்படும். பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 9790491566 மற்றும் 7010882431 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com