பாளையம் புனித ஆரோக்கிய மாதா கோயில் ஆண்டுப் பெருவிழா

பெரம்பலூர் அருகேயுள்ள பாளையம் புனித ஆரோக்கிய மாதா கோயில் 116-ஆவது ஆண்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாளையம் புனித ஆரோக்கிய மாதா கோயில் ஆண்டுப் பெருவிழா

பெரம்பலூர் அருகேயுள்ள பாளையம் புனித ஆரோக்கிய மாதா கோயில் 116-ஆவது ஆண்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் புனித ஆரோக்கிய மாதா கோயில் உள்ளது. 1903 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக் கோயிலின் 116 ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி ஊர்வலத்துக்குப் பிறகு பாளையம் பங்கு குரு ஜான் கென்னடி பங்கேற்று, புனித ஆரோக்கிய மாதா கொடியை மந்திரித்து புனிதப்படுத்தி, கொடி மரத்தில் ஏற்றி வைத்து திருப்பலி நடத்தினார். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு குடும்பங்களைச் சேர்ந்த வகையறாக்களின் சார்பில் மாதா சுற்று பவனி, ஜெப வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தத் தேர் பவனியை பங்கு குரு ஜான் கென்னடி, மந்திரித்து தொடங்கி வைத்தார். தேர் பவனி பாளையம் கிராமத்தின் பிரதான தெருக்கள் வழியாக இழுத்துச் செல்லப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் கோயிலை வந்தடைந்தது. பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பங்கு குரு ஜான் கென்னடி தலைமையில், ஆண்டுப்பெருவிழா சிறப்பு பாடல் திருப்பலியும், கொடி இறக்கமும் நடைபெற்றது. 

விழாவில், பாளையம், பெரம்பலூர், ரெங்கநாதபுரம், குரும்பலூர், சத்திரமனை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திரளாகப் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தலைமை காரியஸ்தர் ஜான் பார்த்தசாரதி தலைமையில் காரியஸ்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com