சுடச்சுட

  

  ரோட்டரி சங்கம் சார்பில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக எழுத்தறிவு தின விழா கொண்டாட்டம், ஆசிரியர்களுக்கு பயிற்சி, சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றது. 
  ரோட்டரி சங்கத் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, ரோட்டரி சங்க துணை ஆளுநர் வழக்குரைஞர் ஜி. பாபு, பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அரியலூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க. தமிழ்மாறன், உலக எழுத்தறிவு தினம் கொண்டாடுவதன் நோக்கம் குறித்து விளக்கினார். தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டது. 
  பின்னர், சிறந்த 15 ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டப்பட்டது.  
  நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். செயலர் கணேசன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai