சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் 3 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டு பணிகள் வழங்கப்பட்டது.
  தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் மது கடைகளை நடத்தி வருகிறது. மது கடைகள் மூலம் பொதுமக்கள் பலர்  பாதிக்குள்ளாகின்றனர். மேலும், டாஸ்மாக் ஊழியர்களும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள், டாஸ்மாக் ஊழியர்கள், பார் ஒப்பந்ததார்கள் ஆகியோரிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும் வகையில்  டாஸ்மாக் குறைதீர் தீர் கூட்டம் நடத்தப்படுகிறது.
  இதன்படி, பெரம்பலூர் மாவட்ட  டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்துக்கு மண்டல மேலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்து, மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசியது:
  பொதுமக்கள், ஊழியர்கள், பார் உரிமையாளர்களின் கோரிக்கை மனுக்கள் பட்டியலிட்டு, தனி பதிவேட்டில் விவரங்களை பதிவு செய்யப்பட்டு 15 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த பதில் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். நீண்டகால விடுப்பில் இருந்த 3 பேருக்கு பணி வழங்கக் கோரி மனு கொடுத்தனர். உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் டிரான்ஸ்பர், அட்டைபெட்டி விலை குறைப்பு, புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பது, வேறு இடத்தில் டாஸ்மாக் மாற்றுவது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இம்மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  எனவே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், டாஸ்மாக் விற்பனையாளர், சூப்பர்வைசர்கள், பார் ஒப்பந்தகாரர்கள் தங்களது குறைகளை இக்குறைதீர் நாள் கூட்டத்தில் மனுவாக அளித்து பயன்பெறலாம் என்றார் அவர்.
  கூட்டத்தில், உதவி மேலாளர்கள் சீனிவாசன்(கிடங்கு), தமிழரசன்(சில்லரை வணிகம்), உதவி கணக்கர் கார்த்திக் மற்றும் பொதுமக்கள், டாஸ்மாக் விற்பனையாளர், சூப்பரைசர்கள், பார் ஒப்பந்தகாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai