சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 13) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பயனடையும் வகையில் பல்வேறு தனியார் துறையினரால் வேலைவாய்ப்பகத்தின் மூலம் வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந் நிறுவனங்களுக்கு 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமோ,  பட்டப்படிப்பு முடித்த தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  
  எனவே, மேற்கண்ட கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளோர் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai