சுடச்சுட

  

  பெரம்பலூர் - செங்குணம் பிரிவு சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் செப். 19 ஆம் தேதி விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பது தொடர்பான இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.  
  கால்நடை மருத்துவ பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் அளிக்கப்படும் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாமில் விஞ்ஞான முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு, உயர் ரக இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, கோழிகளுக்கான தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 9385307022 என்னும் எண்ணில் தொடர்புகொண்டு தங்களது பெயர் மற்றும் ஆதார் அட்டை எண் ஆகியவற்றை தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என, ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai