சுடச்சுட

  

  பெரம்பலூரில் 3 நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவதென அட்வகேட்ஸ் அசோஷியேசன் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
  பெரம்பலூரில் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம், அச் சங்கத்தின் தலைவர் டி. தமிழ்செல்வன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. செயலர் டி. இளவரசன், பொருளாளர் எஸ். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  கூட்டத்தில், வழக்குரைஞர் ரத்தினவேல் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டிப்பது. 
  சம்பவத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்ய காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (செப். 13), 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai