சுடச்சுட

  

  வடகிழக்கு பருவமழை: முன்னெச்செரிக்கை ஆய்வுக் கூட்டம்

  By DIN  |   Published on : 13th September 2019 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளம் மற்றும் இயற்கைச் சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
  மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பேசியது:
  வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்ககூடிய பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பலவீனமான நீர்நிலைகளின் கரைகள், மதகுகளை சரிசெய்திடவும்,  பருவமழை காலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும்போது மக்களை காப்பாற்றிட ஊராட்சி செயலருக்கு உரிய வழிமுறைகளை கடைபிடிக்க தேவையான வழிமுறையை வழங்க வேண்டும். வேளாண் துறை மூலம் வெள்ளக் காலங்களில் வேளாண் பயிர்கள், தோட்டப் பயிர்கள் மற்றும் இதரப் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் கண்டறிந்து அறிக்கை அனுப்பிட வேண்டும் என்றார் அவர்.
  கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai