நாளை உணவுப்பொருள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம் சனிக்கிழமை (செப். 14) நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம் சனிக்கிழமை (செப். 14) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, பெரம்பலூர் வட்டம், செஞ்சேரி கிராமத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சக்திவேல் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், வேப்பந்தட்டை (தெ) கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் த. மஞ்சுளா தலைமையிலும், குன்னம் வட்டம், அந்தூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வீ. கங்காதேவி தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், இரூர் கிராமத்தில் பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் த. பாண்டித்துரை தலைமையிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. 
மேற்கண்ட முகாமில் பொதுமக்கள் பங்கேற்று, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com