Enable Javscript for better performance
சிவில், கிரிமினல் பிரச்னைகளுக்கு குழு அமைத்து தீர்வு: திருச்சி சரக டிஐஜி- Dinamani

சுடச்சுட

    

    சிவில், கிரிமினல் பிரச்னைகளுக்கு குழு அமைத்து தீர்வு: திருச்சி சரக டிஐஜி

    By DIN  |   Published on : 14th September 2019 09:43 AM  |   அ+அ அ-   |    |  

    சிவில் மற்றும் கிரிமினல் கலந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வருவாய்த் துறையினர், காவல் துறையினர் இணைந்த குழு அமைக்கப்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் வி. பாலகிருஷ்ணன். 
    திருச்சி சரகத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில், இதுவரை கண்டறியப்படாமல் உள்ள முக்கிய குற்ற வழக்குகள், நிலுவை வழக்குகளில் முன்னேற்றம் காண்பதற்கான ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
    பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவாகியுள்ள முக்கியக் குற்ற வழக்குகளின் புகார்தாரர்களை அழைத்துக் கருத்து கேட்டறிந்து, வழக்கில் துரித விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கும், கண்டறியப்படாமல் இருக்கக்கூடிய குற்றங்களில், ஏதாவது புதிதாக தகவல் இருந்தால், அதனடிப்படையில் அந்த வழக்குகளைக் கண்டுபிடிக்க ஏதுவாக உடனடியாகத் தனிப்படை அமைத்து விசாரணையை துரிதப்படுத்தவும், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு, இன்னும் பிடிபடாமல் இருக்கும் குற்றவாளிகள் குறித்த தகவல்களை பெற்று, அவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவும் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
    இதில், பெரம்பலூர் மாவட்ட அளவில் 100-க்கும் மேற்பட்ட புகார்தாரர்கள் பங்கேற்று, தங்களுக்குத் தெரிந்த தகவல்களையும், கருத்துகளையும் தெரிவித்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி சரகத்தில், முதல் முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளது.
    கடந்த சில வாரங்களாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய அலுவலகங்களில் மனுதாரர்கள் சிலர் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதில், குறிப்பிட்ட சில சம்பவங்கள் மீடியாக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், சில வழக்குகள் போலீஸாரால் தீர்க்க முடியாத சிவில் சம்பந்தமானவையாகவும் உள்ளன. சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிட முடியாது என்பதை மனுதாரர்கள் உணர வேண்டும்.
    மேலும் புகார் அளித்து காவல் நிலையங்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயர் அதிகாரியின் கவனத்துக்கு புகாரைக் கொண்டு சென்று தீர்வு காண முற்படலாம். அதை விடுத்து, இதுபோன்ற தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களில் ஈடுபட வேண்டாம். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கார்களில் சீட் பெல்ட் அணியாதவர்கள், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் என, நாள்தோறும் சராசரியாக 2 ஆயிரம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதியப்படுகிறது. 
    வாகன ஓட்டிகள் தங்களின் மற்றும் தங்களது குடும்பத்தினரின் நலன்கருதி கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும் என்றார் அவர்.  
    தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புகார் அளிக்க வரும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் அறை மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியாக விளையாட்டு பொருள்கள், பொம்மைகள் கொண்ட குழந்தைகள் விளையாட்டு மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் பாலகிருஷ்ணன். 
    மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலையரசி ஆகியோர் பங்கேற்றனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp