Enable Javscript for better performance
வீர தீரச் செயல் புரிந்தமைக்கான தேசிய விருதுபெற அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வீர தீரச் செயல் புரிந்தமைக்கான தேசிய விருதுபெற அழைப்பு

    By DIN  |   Published on : 14th September 2019 09:47 AM  |   அ+அ அ-   |    |  

    பெரம்பலூர் மாவட்டத்தில் வீர தீரச் செயல் புரிந்தமைக்கான இந்திய குழந்தை நலக் குழுமம் சார்பில் தேசிய விருது பெறத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய குழந்தை நலக் குழுமத்தின் தேசிய விருதானது சமூகக் கொடுமையை எதிர்த்து, உயிரையும் துச்சமென மதித்து, உடல் ரீதியான இன்னல்களையும் தாண்டி தன்னலமற்று துணிச்சலுடன் வீர தீர செயல் புரிந்தமைக்காக வழங்கப்படுகிறது.    இவ்விருது பெற விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 6 வயது முதல் 18 க்குள் இருக்க வேண்டும். ஆண், பெண் (குழந்தை) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வீர தீர செயல்புரிந்த காலம் 1.7 2018 முதல் 30.6. 2019 ஆம் தேதிக்குள் இருக்கவேண்டும்.  
    இதற்கான விண்ணப்பத்தை இந்திய குழந்தை நலக் குழும அலுவலகத்தின் w‌e​b‌s‌i‌t‌e.‌w‌w‌w.‌i​c​c‌w.​c‌o.‌i‌n என்னும் இணையதள முகவரியில் பதிவிறக்கி, அக். 15-க்குள் சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். பரிசு, விருது, பாராட்டு பத்திரம் மற்றும் காசோலை, கல்வி ஊக்கத் தொகை அளிக்கப்படும்.    வீரதீர செயல் புரிந்த தகுதியான குழந்தைகள் (ஆண், பெண் இருபாலர்) சம்பந்தப்பட்ட சாதனைகள் அடங்கிய ஆவணங்களுடன், மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அல்லது 04328-224122 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    kattana sevai