மின்னணுக் கழிவு மேலாண்மையை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் மின்னணுக் கழிவு மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 


பெரம்பலூர் மாவட்டத்தில் மின்னணுக் கழிவு மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மின் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பாளர்கள், தங்களது சாதனங்களை விநியோகஸ்தர்கள், சில்லரை விற்பனையாளர்கள் அல்லது ஆன்லைன் மூலமாக விற்பனை செய்தபின், அப்பொருள்களின் ஆயுள்காலம் முடிந்தவுடன், தயாரிப்பாளர்களின் நீடித்தப் பொறுப்பு என்னும் அடிப்படையில் அவற்றை திரும்பப்பெற்று மறு சுழற்சிக்கு அனுப்புவது கடமையாகும்.
விற்பனையாளர்கள் அல்லது விநியோகஸ்தர்கள் வெளியேற்றும் மின்னணுக் கழிவுகளானது, தயாரிப்பாளர்களால் நியமிக்கப்பட்ட சேகரிப்பு மையங்கள், விநியோகஸ்தர்கள் அல்லது திரும்ப பெற்றுக்கொள்ளும் அமைப்புகள் மூலம் சேகரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுக்கும், மறு சுழற்சி செய்யும் தொழில்சாலைகளை சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். மின்னணு கழிவு மேலாண்மை தொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின் நகல், அங்கீகரிக்கப்பட்ட மின்னணுக் கழிவுகள் பிரித்தெடுத்தல் மற்றும் மறு சுழற்சி செய்யும் தொழில்சாலைகளின் விவரங்கள்  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com