உண்டு உறைவிடப்பள்ளி நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உண்டு உறைவிட பள்ளியை ஏற்று நடத்துவதற்கு தகுதிவாய்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 


பெரம்பலூர் மாவட்டத்தில் உண்டு உறைவிட பள்ளியை ஏற்று நடத்துவதற்கு தகுதிவாய்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019- 20 ஆண்டு திட்டத்தில், ஆலத்தூர் ஒன்றியம், காரை ஊராட்சிக்குள்பட்ட மலையப்ப நகர் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிட பள்ளியை ஏற்று நடத்துவதற்கு, தகுதி வாய்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக, உரிய ஆவணங்ககளுடன் அக். 2 ஆம் தேதி மாலை 5.45-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328 225355, 9788858814 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.  
கணித ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி, பேரளி பள்ளியில் தங்கி மாணவிகளுக்கு பயிற்றுவிக்கும் வகையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் ஆசிரியைகள் (கணிதம்) விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் மேற்பார்வையாளர் (பொ), வட்டார வள மையம் வேப்பூர் என்னும் முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அக். 4 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9788858825 எனும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com