கூட்டுறவு ஒன்றிய நிர்வாகக் குழு தலைவர் பொறுப்பேற்பு 

புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாகக் குழுத் தலைவராக பொன்னமராவதி அதிமுக ஒன்றியச்செயலர் ராம.பழனியாண்டி அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் திங்கள்கிழமை வாழ்த்து பெற்றார். 

புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாகக் குழுத் தலைவராக பொன்னமராவதி அதிமுக ஒன்றியச்செயலர் ராம.பழனியாண்டி அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் திங்கள்கிழமை வாழ்த்து பெற்றார். 
புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாகக் குழு தலைவராக அண்மையில்  பொன்னமராவதி அதிமுக ஒன்றியச் செயலர் ராம.பழனியாண்டி பொறுப்பேற்றார். இதனையடுத்து அவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பிகே.வைரமுத்து ஆகியோரிடம் திங்கள்கிழமை வாழ்த்துபெற்றார். தொடர்ந்து கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிரதம் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இதில், பொன்னமராவதி அதிமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com