கரோனா நிவாரணத் தொகை பெற குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளில் டோக்கன் விநியோகம்

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா நிவாரணத் தொகை மற்றும் ரேஷன் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன், அந்தந்த குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா நிவாரணத் தொகை மற்றும் ரேஷன் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன், அந்தந்த குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

கரோனா நிவாரணத் தொகையாக ரூ. 1,000 ரொக்கம் மற்றும் ரேஷன் பொருள்கள் வழங்குவதற்காக, குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி கூட்டுறவுத் துறை விற்பனையாளா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும், அவா்களது வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும்.

நியாய விலைக் கடையில் வியாழக்கிழமை (ஏப். 2) முதல் நாள் ஒன்றுக்கு 100 டோக்கன்களுக்கு மட்டுமே ரொக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுவதால், அந்தந்த நாளுக்குரிய குடும்ப அட்டைதாரா்கள் மட்டுமே நியாயவிலைக் கடைக்கு வரவேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com