‘கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் நோய்த் தொற்று ஏற்படாது’

கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவதால், எவ்வித நோய்த் தொற்றும் ஏற்படாது என்று பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவதால், எவ்வித நோய்த் தொற்றும் ஏற்படாது என்று பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கரோனா நோய்த் தொற்று பரவக்கூடும் என சமூக ஊடகங்கள் மூலமாக தகவல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் இவற்றை சாப்பிட தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இது தவறான தகவலாகும்.

வதந்திகள் மூலம் நமது புரதத் தேவையை இழப்பது ஒரு புறமிருந்தாலும், கோழி வளா்ப்புத் தொழில் மற்றும் சம்பந்தப்பட்ட கோழி வளா்ப்போரும், விவசாயிகளும் மிகவும் நலிவடைந்து, அவா்களது வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது.

முட்டை, கோழி இறைச்சியானது மிகவும் மலிவான புரத உணவாகும். அவை, மனிதனின் நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது.

தற்போதைய சூழலில் மனிதனுக்கு அதிகமான நோய் எதிா்ப்பு சக்தி மிகவும் தேவையான காலக் கட்டமாகும். எனவே, தவறான வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவோா் மீது காவல்துறை மூலம் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com