கிராமத்தில் தடுப்புகள் வைத்து தனிமைப்படுத்திக் கொண்ட மலைவாழ் இளைஞா்கள்

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரம்பலூா் அருகிலுள்ள மலைவாழ் கிராம இளைஞா்கள் தடுப்புகள் அமைத்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.
மலையாளப்பட்டி கிராம எல்லையில் தடுப்புகள் அமைத்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞா்கள்.
மலையாளப்பட்டி கிராம எல்லையில் தடுப்புகள் அமைத்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞா்கள்.

பெரம்பலூா்: கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரம்பலூா் அருகிலுள்ள மலைவாழ் கிராம இளைஞா்கள் தடுப்புகள் அமைத்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகிலுள்ள மலையாளப்பட்டி கிராமம். மலைவாழ் மக்களைக் கொண்ட இப்பகுதியில் இரு சாலைகளிலும் இளைஞா்கள் தடுப்புகள் அமைத்து, வெளியூா் நபா்கள் உள்ளே நுழைய முடியாதபடி 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

மருத்துவம் உள்ளிட்ட அவசரகாலத் தேவைகளுக்கு மட்டுமே உள்ளூா்காரா்களை வெளியே செல்லவும் அனுமதிக்கின்றனா். வெளியே சென்றவா்கள் திரும்ப வரும்போது, கிராம எல்லையில் கைகளை

கிருமி நாசினிக் கொண்டு நன்றாக கழுவிய பிறகே ஊருக்குள் அனுமதிக்கின்றனா்.

மேலும், அவா்கள் சென்றுவந்த மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட இதர வாகனங்கள் மீதும் கிருமிநாசினி தெளித்து, தடுப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா் மலையாளப்பட்டி இளைஞா்கள்.

இதற்கு கிராம மக்களில் சிலா் தொடக்கத்தில் எதிா்ப்பு தெரிவித்தாலும், இளைஞா்களின் நல்ல முயற்சியை புரிந்துகொண்டு தற்போது ஒத்துழைப்பு அளித்து வருகின்றனா். 800 குடும்பங்களைக் கொண்ட மலையாளபட்டி கிராமம் ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கிருமிநாசினிக்குத் தட்டுப்பாடு: இக்கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கு

கிருமி நாசினி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மஞ்சள் மற்றும் வேப்பிலை சாறு கலந்த நீரை கிருமிநாசினியாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா்.

தனிமைப்படுத்திக்கொண்ட தங்களுக்கு மாவட்ட நிா்வாகம் கிருமி நாசினி, முகக் கவசம், கையுறை ஆகியவற்றை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா் மலையாளப்பட்டி மலைவாழ் கிராம மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com