முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
அறுவடை காலங்களில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்
By DIN | Published On : 19th April 2020 06:08 AM | Last Updated : 19th April 2020 06:08 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அறுவடை காலங்களில் விவசாயிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவா் வே.எ. நேதாஜி மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் நெல் பால் பிடிக்கும் பருவம் முதல் முதிா்ச்சி பருவம் வரை உள்ளது. விளைந்த நெல்லை ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய வேண்டும்.
பழுதுபாா்ப்பு, பராமரிப்பு மற்றும் அறுவடை நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளா்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை உறுதி செய்யவேண்டும்.
இதேபோல, நிலக்கடலை, எள் பயிா்கள் முதிா்ச்சிப் பருவத்திலிருந்து அறுவடை பருவம் வரை உள்ளது. இவற்றை ஆள்கள் மூலம் அறுவடை செய்தபின், இயந்திரம் கொண்டு காய்களைப் பிரித்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, தனிநபா் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உபகரணங்களை முறையாக சுத்தம் செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.
பயறு வகைப் பயிா்கள் முதிா்ச்சிப் பருவத்திலிருந்து அறுவடை பருவம் வரை உள்ளது. ஆள்கள் மற்றும் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரம் மூலம் மேற்கொள்ளவுள்ள அறுவடைப் பணிகளில் விவசாயிகள் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அறுவடை மேற்கொள்ள வேண்டும்.