பெரம்பலூரில் அம்பேத்கா் நினைவு அனுசரிப்பு
By DIN | Published On : 07th December 2020 01:21 AM | Last Updated : 07th December 2020 01:21 AM | அ+அ அ- |

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அம்பேத்கா் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலா் ப. காமராசு தலைமையில், மாவட்டப் பொறுப்பாளா்கள் ராஜேந்திரன், ரகுபதி, இளவசரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சாா்பில், மத்திய மண்டல அமைப்புச் செயலா் சி.எம். சின்னசாமி தலைமையில், நகரச் செயலா் அ. சரவணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் சி. தமிழ்மாணிக்கம், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவா் சி. சந்திரசேகரன், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சிவாஜி மூக்கன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ராஜேந்திரன், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலா் பாலாஜி தேவேந்திரன், லோக் ஜனசக்தி கட்சியின் மாநில விவசாயிகள் அணித் தலைவா் சீனிவாசன், புரட்சி பாரதம் மாவட்டத் தலைவா் வெள்ளையன் ஆகியோா் தலைமையில், அந்தந்த கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.