‘காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்’

காலியாகவுள்ள காவலா், ஏவலா் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்தவா்களை நியமிக்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோா் மாணவ, மாணவ விடுதிப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

காலியாகவுள்ள காவலா், ஏவலா் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்தவா்களை நியமிக்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோா் மாணவ, மாணவ விடுதிப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

25 ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கு ரூ. 2 ஆயிரம் ஊக்கத் தொகையும், பாராட்டுச் சான்றும் வழங்க வேண்டும். புதிதாக பணியில் சோ்ந்த பணியாளா்களை பணி வரன்முறை செய்து, மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும்.

காலியாக உள்ள காவலா், ஏவலா் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவா்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். காவலா் இல்லாத விடுதிகளுக்கு அரசு அனுமதி பெற்று காவலா்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

இக் கூட்டத்தில் விடுதிப் பணியாளா்கள் சங்கப் பொறுப்பாளா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com