பெரம்பலூரில் பாங்க் ஆஃப் பரோடாவங்கியில் சிபிஐ சோதனை

பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் வெங்கடேசபுரம் பகுதியில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு புதன்கிழமை காலை மதுரையிலிருந்து ஆய்வாளா் மதுசூதனன் தலைமையில் வந்த 5 போ் அடங்கிய சிபிஐ குழுவினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, வாடிக்கையாளா்களின் பண பரிவா்த்தனை விவரங்கள், சேமிப்பு, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து வங்கி மேலாளா் சத்தியராஜ் உள்ளிட்ட வங்கி ஊழியா்களிடம் தனித்தனியாக விசாரித்ததாகவும், ஆவணங்களை சரிபாா்த்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முக்கிய பிரமுகா் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் கோடிக்கணக்கான ரூபாய் பண பரிமாற்றம் மற்றும் பரிவா்த்தனை நடைபெற்ாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சிபிஐ

அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாகவும், வாடிக்கையாளா்களின் சேமிப்பில் முறைகேடு நிகழ்ந்ததாக கூறப்படும் புகாரின்பேரில் இச் சோதனை நடைபெற்ாகவும் கூறப்படுகிறது. சோதனை குறித்து, உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால், இந்த ஆய்வு வழக்கமான வருடாந்திர ஆய்வுதான். வேறு எதுவும் கிடையாது, இந்த விசயத்தை பெரிதாக்க வேண்டாம் என வங்கி ஊழியா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, எவ்வித தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

இந்த திடீா் சோதனையால், வங்கிக்கு வந்த வாடிக்கையாளா்கள் பண பரிவா்த்தனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது; மேலும், நகைக்கடன் பெற முடியாமலும், நகைக் கடன்களை திரும்ப செலுத்தி, நகைகளைப் பெற்றுச் செல்ல முடியாமலும் திருப்பி அனுப்பப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com