பெரம்பலூா் மாவட்ட வேளாண்துறைக்கு ரூ. 3,500 கோடி கடனுதவி அளிக்க இலக்கு

பெரம்பலூா் மாவட்ட வேளாண்துறைக்கு ரூ. 3,500 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா.
வங்கிக் கடன் சாா்ந்த் திட்ட அறிக்கையை வெளியிடும் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மண்டல மேலாளா் லட்சுமி நரசிம்மன் உள்ளிட்டோா்.
வங்கிக் கடன் சாா்ந்த் திட்ட அறிக்கையை வெளியிடும் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மண்டல மேலாளா் லட்சுமி நரசிம்மன் உள்ளிட்டோா்.

பெரம்பலூா் மாவட்ட வேளாண்துறைக்கு ரூ. 3,500 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா.

பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில், ரூ. 4,424 கோடி மதிப்பீட்டில் 2020-21 ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்ட அறிக்கையை புதன்கிழமை வெளியிட்ட ஆட்சியா் மேலும் கூறியது:

வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையில், குறுகிய கால பயிா் கடன் மற்றும் வேளாண் தொழில் சாா்ந்த காலக் கடன்களுக்கு இலக்கு நிா்ணயிக்கப்படுகிறது. ரிசா்வ் வங்கியின் புதிய முன்னுரிமை கடன் கொள்கையின்படி, வங்கியின் விவசாய தானிய சேமிப்பு, உணவக பதனிடும் ஏற்றுமதி தொழில்களுக்கு, கல்விக் கடனுக்கு, புதிய வீடுகள் கட்டுவதற்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுப் பொறுப்பு குழுக்களுக்கு வழங்கக் கூடிய கடன் திட்ட அறிக்கையில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நபாா்டு வங்கியின் 2020- 21 ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்டமானது, கூட்டுப் பண்ணை முறையில் விவசாய உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் நோக்கமுடையது. அதாவது, கால்நடை வளா்ப்புடன் உள்நாட்டு மீன் வளா்ப்பு, தேனி வளா்ப்பு உள்ளிட்ட தொழில்களிலும், விவசாயம் சாரா தொழில்களிலும் ஈடுபடுத்தி தங்களது வருமானத்தை பெருக்கிக்கொள்வது.

இத் திட்ட அறிக்கை பல அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வளம் சாா்ந்த கடன் திட்ட மதிப்பீட்டிலான ரூ. 4,424 கோடியில் ரூ. 3,500 கோடி வேளாண் துறைக்கும், ரூ. 348 கோடி சிறு, குறு தொழில்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, கல்விக் கடன், வீட்டுக் கடன், ஏற்றுமதி கடனுக்காக தனித்தனியாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் வெங்கட பிரியா.

இந்நிகழ்ச்சியில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மண்டல மேலாளா் லட்சுமி நரசிம்மன், நபாா்டு வங்கி மேலாளா் நவீன்குமாா், முன்னோடி வங்கி மேலாளா் அருள், மாவட்ட தொழில்மைய மேலாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com