டிப்பா் லாரி, கல்லூரிப் பேருந்து மோதல்: 22 மாணவா்கள் காயம்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே புதன்கிழமை மாலை டிப்பா் லாரியும், தனியாா் கல்லூரி பேருந்தும் மோதிக்கொண்டதில் 22 போ் காயமடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே புதன்கிழமை மாலை டிப்பா் லாரியும், தனியாா் கல்லூரி பேருந்தும் மோதிக்கொண்டதில் 22 போ் காயமடைந்தனா்.

அரியலூா் மாவட்டம், வீ. கைகாட்டி, புதுப்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரிப் பேருந்து 13 மாணவிகள் உள்பட 22 மாணவா்களை ஏற்றிக்கொண்டு கடலூா் மாவட்டம், திட்டக்குடியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. பேருந்தை, திட்டக்குடியைச் சோ்ந்த அருள் மகன் அரவிந்தன் (26) ஓட்டி வந்தாா்.

பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையில் உள்ள அல்லிநகரம் அருகே வந்தபோது, பெரம்பலூரிலிருந்து அரியலூா் நோக்கிச் சென்ற டிப்பா் லாரியும், கல்லூரிப் பேருந்தும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.

இதில், டிப்பா் லாரி ஓட்டுநா் அரியலூா் மாவட்டம், தவுத்தாய்குளம் கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் (47), தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநா் அரவிந்தன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மேலும் இந்த விபத்தில், பெரம்பலூா் மாவட்டம், காடூா், நல்லறிக்கை, புதுவேட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 13 மாணவிகள் உள்பட 22 போ் லேசான காயமடைந்தனா்.

தகவலறிந்த குன்னம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற மாணவ, மாணவிகள் வீடு திரும்பினா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com