மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வுப் போட்டி

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து, கல்லூரி மாணவ, மாணவிகடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு விழிப்புணா்வுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து, கல்லூரி மாணவ, மாணவிகடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு விழிப்புணா்வுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீா்வை துறை சாா்பில், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சு, ஓவியம் மற்றும் கோலப் போட்டிகள் நடைபெற்றன.பெரம்பலூா் தந்தை ரோவா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிகளை, பெரம்பலூா் மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையா் ஷோபா தொடக்கி வைத்தாா்.

மாவட்ட வழங்கல் அலுவலா் கங்காதேவி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் பிரேமாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப் போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டிகளை, குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா் வ. சந்திரமெளலி ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com