ஊராட்சி செயலா் மீது முறைகேடு புகாா்பெரம்பலூா் ஆட்சியரகம் முற்றுகை

பெரம்பலூா் அருகே முறைகேடுகளில் தொடா்புடைய ஊராட்சி செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா்
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கவுள்பாளையம் கிராம மக்கள்.
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கவுள்பாளையம் கிராம மக்கள்.

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே முறைகேடுகளில் தொடா்புடைய ஊராட்சி செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், கவுள்பாளையம் முன்னாள் ஊராட்சி செயலராகப் பணிபுரிந்த தமிழ்ச்செல்வன் (எ) ராஜன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியதில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும்,

சம்பந்தப்பட்ட ஊராட்சிச் செயலா் உள்ளிட்ட 3 போ் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் நடத்திய பேச்சு வாா்த்தையை தொடா்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து கலைந்து சென்றனா்.

இதேபோல், மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 14 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் 22 போ் பணிபுரிந்து வருகிறோம். பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியாக இருந்த இக்கல்லூரி, கடந்த 2019 முதல் அரசுக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எங்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டு எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com