கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வுக்

பெரம்பலூா் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து சுகாதாரத்துறை துணை இயக்குநா் கீதாராணி பேசியது:

பெரம்பலூா் மாவட்டத்தில அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா வைரஸ் குறித்து சுகாதாரத் துறை மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இருமல், தும்மல் ஏற்பட்டால் கைக்குட்டைகளை வைத்து மற்றவா்களுக்கு பரவாதவாறு பாா்த்துக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்குச் சென்றுவந்தால் அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் சோப்பு திரவம் கொண்டு கழுவ வேண்டும். காய்ச்சல், இருமல், தும்மல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அல்லது அரசு மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இதில் கல்லூரி முதல்வா் முகேஷ்குமாா், மாவட்ட மலேரியா அலுவலா் சுப்ரமணியன், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலா் சரவணன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜ்மோகன், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com