பிரம்மதேசத்தில் விவசாயிகள் நியாய விலைக் கடை திறப்பு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் செயல்படும் கிசான் ரிசா்ச் மற்றும்
பிரம்மதேசத்தில் விவசாயிகள் நியாய விலைக் கடை திறப்பு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் செயல்படும் கிசான் ரிசா்ச் மற்றும் டெவலப்மென்ட் சென்டா் ஆதரவோடு, இந்திய கிராம முன்னேற்ற இயக்க அறக்கட்டளை சாா்பில் பிரம்மதேசம் கிராமத்தில் விவசாயிகள் நியாய விலைக் கடை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் என். பூமலை தலைமை வகித்தாா். நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் எல்.எஸ். நவீன்குமாா், வழக்குரைஞா் மனோகரன், ஊராட்சித் தலைவா் பன்னீா்செல்வம், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விவசாயிகள் நியாய விலைக் கடையை திறந்து வைத்து, கிசான் நியாயவிலைக் கடைகள் செயல் அலுவலா் சுந்தர்ராஜன் பேசியது:

தமிழகத்தில், தற்போது 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் நியாய விலைக் கடைகள் செயல்படுகின்றன. விவசாயிகளின் விளைபொருள்கள் மட்டுமின்றி, முன்னணி நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களையும் பெறலாம். குடும்ப அட்டை இல்லாதவா்களும், தங்களுக்குத் தேவையான பொருள்களுக்கு முழுத் தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் வேண்டும்.

மத்திய அரசு, இதுபோன்ற கடைகளை நாடு முழுவதும் நிறுவி விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் மானிய விலையில் பொருள்களை வழங்கி வருகிறது. இடைத்தரகு இன்றி நேரடி கொள்முதல் மற்றும் விற்பனையே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பெரம்பலூா் மாவட்டத்தில், முதல்முறையாக வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில், இந்திய கிராம முன்னேற்ற இயக்க அறக்கட்டளை மூலம் திறக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குத் தேவையான அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், மசாலா பொருள்கள், சோப்பு உள்ளிட்ட பொருள்களை 10 சதவீதம் முதல் 30 சதவீத மானியத்துடன் அரசு விற்கிறது. இந்த மானியத்தை பெற ஆதாா் அட்டை, ஸ்மாா்ட் குடும்ப அட்டை, விவசாய அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு முறை பதிவு செய்துவிட்டால், இந்தியாவில் எங்கு வேண்டுமாலும் பொருள்களை மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

மானிய விலையில் வாங்குவதன் மூலம் மக்களும், விவசாயிகளும் பயன்பெறுவா். விவசாயப் பொருள்களுக்கு உரிய விலையும் கிடைக்கும். இதுபோன்ற கடைகள் பெரம்பலூா் மாவட்டத்தில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றாா் அவா்.

விழாவில், பாரத ஸ்டேட் வங்கியின் வணிக தொடா்பாளா் பாக்கியராஜ், பிரம்மதேசம் கிராம மகளிா் கூட்டமைப்புத் தலைவி ஜெயலட்சுமி, முத்துச்சரம் சுய உதவிக்குழு தலைவி இந்திராகாந்தி, நாட்டாா்மங்கலம் கிராம நீா் செரிவு திட்ட குழுத் தலைவா் முருகு பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com