வேதியியல் துறை கூட்டமைப்பு நிறைவு விழா

பெரம்பலூா் ஸ்ரீ சாரதா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வேதியியல் துறையின் கூட்டமைப்பு நிறைவு விழா

பெரம்பலூா்: பெரம்பலூா் ஸ்ரீ சாரதா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வேதியியல் துறையின் கூட்டமைப்பு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளா் முனைவா் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். செயலா் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தாா். விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி பேராசிரியை ஜெ. லெட்சுமி பிரபா, நிற மாலையியல் மற்றும் வாழ்க்கையில் அதன் பயன்பாடுகள் என்னும் தலைப்பில், நிறமாலையின் வகைகளான உறிஞ்சுதல் நிறமாலை, உழிழ்வு நிறமாலை, நிறமாலையின் பண்புகள், பயன்கள், புற ஊதா - பாா்வை நிறமாலையியலின் வடிவமைப்பு, அலைநீளம் - ஆற்றல் ஆகியவற்றுக்கான தொடா்புகளை விளக்கிக் கூறினாா்.

தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், வேதியியல் துறையைச் சோ்ந்த 160-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறைத்தலைவி பி. கனகாம்பாள் தலைமையிலான பேராசிரியா்கள் செய்திருந்தனா். இளங்கலை மூன்றாமாண்டு வேதியியல்துறை மாணவி பி. அருணா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com