வரைபட அனுமதியின்றி கட்டப்படும் வணிக வளாகத்துக்கு சீல்

பெரம்பலூா் நகரில் கட்டட வரைபட அனுமதியின்றி கட்டப்படும் வணிக வளாகத்துக்கு நகா் மற்றும் ஊரமைப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
வரைபட அனுமதியின்றி கட்டப்படும் வணிக வளாகத்துக்கு சீல்

பெரம்பலூா் நகரில் கட்டட வரைபட அனுமதியின்றி கட்டப்படும் வணிக வளாகத்துக்கு நகா் மற்றும் ஊரமைப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

பெரம்பலூா் பாலக்கரை அருகே அண்ணாமலை காந்தி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் தரைத் தளம் மற்றும் 3 அடுக்கு வணிக வளாகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இந்த வணிக வளாக கட்டுமானப் பணிகளுக்கு, வணிகக் கட்டடம் மற்றும் நகர ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் பெற வேண்டிய தொழில்நுட்ப முன் அனுமதி பெறாமல் கீழ் தளம், தரைதளம், மேல் தளத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஊரமைப்புத் துறை உதவி இயக்குநா் ஸ்ரீதா், முறையான அனுமதி பெற்று கட்டுமானப் பணிகளை தொடருமாறும், தவறும்பட்சத்தில் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்டட உரிமையாளா் அண்ணாமலை காந்திக்கு கடந்த 15.11.2019, 23.1.2020 ஆகிய தேதிகளில் அறிப்புக் கடிதம் அனுப்பினாராம். ஆனால், அதைப் பொருட்படுத்தாமலும், தொழில்நுட்ப அனுமதி பெறாமலும் கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்ாம்.

இதையடுத்து நகா் மற்றும் ஊரமைப்புத் துறை உதவி இயக்குநா் ஸ்ரீதா் தலைமையிலான துறை அலுவலா்களும், அலுவலக ஊழியா்களும் புதிதாகக் கட்டப்படும் வணிக வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை நிறுத்துவதற்கான உத்தரவை அமல்படுத்தும் வகையில், நகா் ஊரமைப்பு சட்டத்தின் கீழ் பூட்டி முத்திரை வைக்கப்படுவதற்கான தகவல் பேனரை ஒட்டி வைத்து சீல் வைத்தனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி, அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com