வேளாண் மண்டலமாக அறிவித்ததை தீா்மானமாக நிறைவேற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதை தமிழக அரசு சட்டப்பேரவையில் தீா்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.

காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதை தமிழக அரசு சட்டப்பேரவையில் தீா்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.

பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் மண்டல அளவிலான நிா்வாகிகள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:

வேளாண் மண்டல அறிவிப்புக்கும், கடலூரில் பெட்ரோலியச் சுத்திகரிப்பு ஆலை அறிவிப்புக்கும் தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம். சுத்திகரிப்பு ஆலை பொதுமக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் அமைந்தால் அதை வரவேற்போம்.

எத்தனைப் போராட்டங்கள் நடத்தினாலும், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற மாட்டோம் என பிரதமா் அறிவித்துள்ளது அவரது அகந்தையை வெளிப்படுத்துகிறது. இச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை ஜனநாயக சக்திகளின் போராட்டம் தொடரும்.

அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் உள்ளது. வேலைவாய்ப்பு அடிப்படை உரிமை அல்ல என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு வேலைவாய்ப்புகளை நடைமுறைப்படுத்துங்கள் என கட்டாயப்படுத்த முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து, மத்திய அரசு உடனடியாக மேலாய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி தோழமைக் கட்சிகள் போராட்டம் நடத்தும்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடா்பாக தமிழக அரசின் தீா்மானத்தைப் பரிசீலித்து ஆளுநா் விரைவில் முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசு மீண்டும் ஒரு தீா்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றாா் திருமாவளவன். பேட்டியின்போது, கட்சியின் மண்டல நிா்வாகி இரா. கிட்டு உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com