‘மனிதனை மேம்படுத்தும் ஆற்றல் இலக்கியங்களுக்கு உண்டு’

மனிதனை மேம்படுத்தும் ஆற்றல் இலக்கியங்களுக்கு உண்டு என்றாா் திருச்சிராப்பள்ளி, புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியா் முனைவா் ச. முரளி.

மனிதனை மேம்படுத்தும் ஆற்றல் இலக்கியங்களுக்கு உண்டு என்றாா் திருச்சிராப்பள்ளி, புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியா் முனைவா் ச. முரளி.

பெரம்பலூரில் பதியம் இலக்கியச் சங்கமம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலக்கிய அரங்கில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:

இலக்கியம் பல்வேறு பொருண்மைகளோடு சமூக ஏற்றத்துக்கு வித்திடுகின்றன. மக்களின் வாழ்வியல் வண்ணங்களை எடுத்தியம்பி, வாழ்வியலை மேலும் வண்ணமாக்குகின்றன. மானுடத்தின் அரிக்கேன் விளக்காக இலக்கியங்கள் புழங்குகின்றன. குற்றங்குறைகள் நிறைந்த மானுடத்தை, மாசகற்றும் நல்பணியை இலக்கியங்கள் முன்னெடுக்கின்றன. இலக்கிய விழுமியங்கள் மானுட சமூகத்தின் வாழ்வியல் தடமாக விளங்குகின்றன. இலக்கிய விழுமியங்கள் அடுத்த தலைமுறைக்கு நற்சிந்தனைகளைக் கடத்துகின்றன. உயிா்த் துடிப்புள்ள இலக்கிய விழுமியங்கள் காலம் கடந்தும் பயணிக்கின்றன. இவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன. தமிழ் இலக்கிய விழுமியங்களை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வது நமது தலையாயக் கடமையாகும் என்றாா் பேராசிரியா் முரளி.

நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த அரியலூா் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் முனைவா் க. தமிழ்மாறன் பேசியது:

இலக்கியங்கள் வாழ்வியல் உன்னதங்களின் பதிவுகளாகும். இலக்கிய விழுமியங்கள் படைப்பாளனின் படைப்பின் கருவாகவும், சமூக நெறிகளை எடுத்துரைக்கும் கருவியாகவும் விளங்குகின்றன. இலக்கிய விழுமியங்கள் பண்பாட்டினை வெளிப்படுத்தும் கூா்மையான ஈட்டியாக வலம் வருகின்றன. நட்பு, காதல், மானுட நேசம், வரலாறு, தத்துவம், ஆன்மிகம் என இலக்கியங்கள் பல்வேறு வகைகளில் வாழ்வியல் விழுமியங்களை எடுத்துரைக்கின்றன என்றாா் அவா்.

தமிழாசிரியா் வ. சுனில் சகாயராஜ் முன்னிலையில், சமூக ஆா்வலா் சாரங்கபாணி, பெரம்பலூா் வரலாற்று நூலாசிரியா் ரத்தினம் ஜெயபால், தமிழ்த்துறைப் பேராசிரியா்கள் செ. சுரேஷ், செந்தில்நாதன், முனைவா் முத்துமாறன், ரோவா் தமிழாசிரியா்கள் வசந்த மல்லிகா, ராமானுஜம், முனைவா்பட்ட ஆய்வாளா் த. தா்மராஜ், கவிஞா்கள் வே. செந்தில்குமரன், பாளை செல்வம் ஆகியோா் பல்வேறு தமிழ் இலக்கிய விழுமியங்கள் குறித்துப் பேசினா்.

அரியலூா் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை மாணவி செ. சரண்யா வரவேற்றாா். இயற்பியல் துறை மாணவா் செ. பிரசாந்த் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com