விழாக்கள், சுபநிகழ்ச்சிகளில் தோட்டக்கலை செடிகள் வழங்கல் நிகழாண்டில் இதுவரையில் 4,500 விநியோகம்

விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு குறைந்த விலையில் தோட்டக்கலை செடிகள் விநியோகம் செய்யப்படுகிறது என்றாா் ஆட்சியா் வே. சாந்தா.

விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு குறைந்த விலையில் தோட்டக்கலை செடிகள் விநியோகம் செய்யப்படுகிறது என்றாா் ஆட்சியா் வே. சாந்தா.

தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் கீழ், தமிழ்நாடு தோட்டக்கலை வளா்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் 63 அரசு தோட்டக்கலை பண்ணைகளும், 19 பூங்காக்களும் செயல்பட்டு வருகின்றன. இதில், நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல் மற்றும் விளாம்பழம், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மர வேம்பு, புங்கம், தேக்கு மற்றும் சவுக்கு போன்ற மரக்கன்றுகளும் மல்லிகை, வெட்சி, அரளி போன்ற பூச்செடிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் அழகுச்செடிகள் ரூ. 5 முதல் ரூ.10 வரையிலும், வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரச்செடிகள் ரூ. 10 முதல் ரூ. 20 வரையிலும், பழச்செடிகள் ரூ. 8 முதல் ரூ. 60 வரையிலும், மலா்ச்செடிகள் ரூ. 8 முதல் ரூ. 30 வரையிலும் விற்கப்படுகிறது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இதுவரை நிகழாண்டில் மட்டும் 4,500 மரக்கன்றுகளும், பழக்கன்றுகளும் சுப நிகழ்ச்சிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

எனவே, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் அல்லது மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அலுவலகத்தை அணுகி 1800 425 4444 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com