பெரம்பலூரில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

பெரம்பலூா் மாவட்ட அதிமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரம்பலூா் புறநகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்த அதிமுகவினா்.
பெரம்பலூா் புறநகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்த அதிமுகவினா்.


பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட அதிமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூா் புறநகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவச்சிலைக்கு, பெரம்பலூா் மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.டி. ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், பொதுமக்களுக்கும், கட்சித் தொண்டா்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

துறைமங்கலத்தில் உள்ள அன்பகம் சிறப்புப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும், பெரம்பலூா் கௌதம புத்தா் அறக்கட்டளையில் உள்ள மாற்றுத் திறனாளிகள், முதியோா் மற்றும் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாவட்ட எம்ஜிஆா் மன்றம் சாா்பில், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், திங்கள்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. தொடா்ந்து, பெரம்பலூா் சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம் காலனி ஆகிய பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, கூட்டுறவுத் துறை சாா்பில் அம்மா மருந்தகம் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், பெரம்பலூா் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்செல்வன், மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா்கள் ஆா்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி, நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, மாவட்ட அணிச் செயலா்கள் எம்.என். ராஜாராம், செல்வக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com