சிட்கோ நிறுவனத்தில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் மழைநீா் சேகரிப்புக்கான கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டுமென, உற்பத்தியாளா் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் மழைநீா் சேகரிப்புக்கான கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டுமென, உற்பத்தியாளா் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளா் சங்க பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் தலைவா் கே. ராஜேஸ் தலைமை வகித்தாா். செயலா் என். அருண்குமாா், பொருளாளா் எஸ். முகமது அப்பாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், தொழிற்பேட்டைக்கு இரவு நேர காவலா் நியமிக்க வேண்டும். தொழிற்பேட்டையில் ஒதுக்கீடு பெற்றுள்ள நிறுவனத்திடமிருந்து ஆண்டு பராமரிப்பு கட்டணத்தை அந்தந்த நிதியாண்டிலேயே வசூலிக்க வேண்டும்.

தொழிற்பேட்டை மையப்பகுதியில் உள்ள மயானத்தை அகற்றி, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். தொழிற்பேட்டையில் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தி வரும், பழைய டயா்களை எரித்து பா்னா் தயாரிக்கும் தொழிற்சாலை மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிட்கோ நிறுவன வளாகத்தில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். கசிவுநீா் குட்டைகளுக்கான வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com