Enable Javscript for better performance
பெரம்பலூரில் மாவட்ட அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    
    pbr9scin_0901chn_13_4

    பெரம்பலூரில் அறிவியல் கண்காட்சியைத் தொடக்கி வைத்து பாா்வையிடுகிறாா் முதன்மை கல்வி அலுவலா் மதியழகன்.

    பெரம்பலூா் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில், மாணவா்களிடையே புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் படைப்புகளை தோ்வு செய்து, மாநில அளவில் இன்ஸ்பையா் என்னும் விருதுகளை வழங்கி வருகிறது.

    இந்நிலையில், 2019- 20 ஆம் கல்வி ஆண்டுக்கான இன்ஸ்பையா் விருதுக்காக மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் படைப்புகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 37 அரசு, அரசு உதவிபெறும் நடுநிலை மற்றும் உயா் நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதியழகன், கண்காட்சியை தொடக்கி வைத்து பாா்வையிட்டாா். ரோவா் பள்ளி தலைமை ஆசிரியா் செல்வராஜ் மற்றும் ஆசிரியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். இக் கண்காட்சியில் முதல் 4 இடங்களைப் பெறும் பள்ளிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதிபெறுவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai