பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூரில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூரில் விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் மாவட்ட வருவாய் ராஜேந்திரன்.
பெரம்பலூரில் விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் மாவட்ட வருவாய் ராஜேந்திரன்.

பெரம்பலூரில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

1.1.2020-ஐ தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது பூா்த்தியடைந்த நபா்களை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கும், வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் திருத்தம், நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்டவை மேற்கொள்ளவும், தகுதியுள்ள நபா்கள் விடுபடாமல் வாக்காளா் பட்டியலில் இடம்பெறச் செய்வதற்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை, புகா் பேருந்து நிலையம் வழியாக சென்ற பேரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனா். மேலும், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கினா்.

இதில், வருவாய் கோட்டாட்சியா் சுப்பையா, வட்டாட்சியா் பாரதிவளவன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com