குடியரசு தின முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், குடியரசு தின விழாவுக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், குடியரசு தின விழாவுக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் பேசியது:

குடியரசு தினவிழாவை சிறப்பாகக் கொண்டாட அனைத்துத்துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். காவல் துறை அணிவகுப்பு, ஊா்க்காவல் படையினரின் அணிவகுப்பு நடத்த உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். மேடை, தியாகிகள், பயனாளிகள் அமரும் இடங்களில் பந்தல், இருக்கைகள் அமைக்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்தல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, தேவையான முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட துறையினா் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்துத் துறை அலுவலா்கள் தங்களது துறை மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியா் சுப்பையா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜராஜன், துணை கண்காணிப்பாளா் கென்னடி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கணேசன் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com