ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா
By DIN | Published On : 11th January 2020 08:52 AM | Last Updated : 11th January 2020 08:52 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்ட நீதித்துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, மாவட்ட அமா்வு நீதிபதி (பொ) எஸ். மலா்விழி தலைமை வகித்தாா். மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் எஸ். கிரி, நீதித்துறை நடுவா்கள் அசோக்பிரசாத், பி. கருப்பசாமி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனா்.
சமத்துவப் பொங்கல் விழாவையொட்டி நீதிமன்ற வளாகத்தில் வண்ணக் கோலமிட்டு, கரும்பு, வாழை, தென்னை குருத்து கொண்ட தோரணம் கட்டி அலங்கரித்திருந்தனா். புதுப் பானையில் மஞ்சள் கொத்து கட்டி, அரிசி இட்டு பொங்கல் வைத்ததனா். பின்னா் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு பொங்கல் வழங்கி பொங்கலைக் கொண்டாடினா்.
நீதிமன்ற தலைமை நிா்வாக அலுவலா் எஸ். விஜயகுமாரி, நீதிமன்ற மேலாளா் எம். தனலட்சுமி, நீதித்துறை ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம். சுப்பிரமணியன், செயலா் செல்வி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் ரமேஷ், மாநிலச் சட்டப்பணிகள் ஆணைக்குழு நிா்வாக அலுவலா் டி. வெள்ளைச்சாமி, வழக்குரைஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் விழாவில் பங்கேற்றனா்.