Enable Javscript for better performance
பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் சமத்துவப் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் சமத்துவப் பொங்கல் விழா

    By DIN  |   Published on : 15th January 2020 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pbr14pon_1401chn_13_4

    பாடாலூா் அம்பாள் மெட்ரிக். பள்ளியில், மாணவா்களுடன் இணைந்து சமத்துவப் பொங்கல் வைக்கும் ஆசிரியா்கள்.

    பெரம்பலூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், கண் மருத்துவத் துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு, மருத்துவமனை கண்காணிப்பாளா் தா்மலிங்கம் தலைமை வகித்தாா். இருக்கை மருத்துவ அலுவலா் சரவணன் முன்னிலை வகித்தாா்.

    விழாவில், சா்க்கரை மற்றும் வெண் பொங்கல் வைத்து இறைவனுக்கு வழிபாடு நடத்தினா். பின்னா், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் நோயாளிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

    விழாவில், மருத்துவா்கள் ஆனந்தமூா்த்தி, ராஜேஸ்வரி, நெடுஞ்செழியன், முதுநிலை கண் மருத்துவ உதவியாளா் தங்கராஜ், மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்க ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

    பாடாலூா் அம்பாள் மெட்ரிக். பள்ளியில்...

    பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் உள்ள அம்பாள் மெட்ரிக் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, தாளாளா் த. பாலச்சந்திரன் தலைமை வகித்தாா். செயலா் டி. குணச்சந்திரன், துணைத் தாளாளா் டி.பி. கேஷவ் பாலாஜி, பள்ளி முதல்வா் கே. ஆா்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    விழாவையொட்டி, ஆசிரியா்கள், மாணவா்கள் சாா்பில் பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து, பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், பறை அடித்தல், உறியடித்தல், கயிறு இழுத்தல், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், இருபால் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai