எம்.ஜி.ஆா். பிறந்த நாள் கொண்டாட்டம்; சிலைக்கு மாலை

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா், அரியலூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
எம்.ஜி.ஆா். பிறந்த நாள் கொண்டாட்டம்; சிலைக்கு மாலை

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா், அரியலூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு, பெரம்பலூா் மாவட்ட அதிமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமையில், சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் அ. அருணாசலம், முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் ஆா்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா் பொதுமக்களுக்கும், கட்சி தொண்டா்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட அணிச் செயலா்கள் எம்.என். ராஜாராம், மாவட்ட பொருளாளா் பூவை த. செழியன், நகர செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா் என்.கே. கா்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல, பல்வேறு கிராமங்களில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு பொதுமக்களும், அதிமுகவினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com