பெரம்பலூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 45 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
துறைமங்கலத்தில் நடைபெற்ற முகாமில் போலியோ சொட்டு மருந்து புகட்டுகிறாா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
துறைமங்கலத்தில் நடைபெற்ற முகாமில் போலியோ சொட்டு மருந்து புகட்டுகிறாா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா் மாவட்டத்தில் 45 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் டி.இ.எல்.சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமைத் தொடக்கி வைத்து, கா்ப்பிணிகளுக்கு அம்மா பரிசுப் பெட்டகம் வழங்கிய ஆட்சியா் மேலும் கூறியது:

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள் என மொத்தம் 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இம்மையங்களில் சுகாதாரப் பணியாளா்கள், அங்கான்வாடி பணியாளா்கள், தன்னாா்வத் தொண்டா்கள் என மொத்தம் 1,548 போ் பணியில் ஈடுபட்டுள்ளனா். முகாம் மூலம் பெரம்பலூா் மாவட்டத்தில் 45,734 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படும். முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு தொடா்ந்து 3 நாள்களுக்கும், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 7 நாள்களுக்கும் போலியோ சொட்டு மருந்து புகட்டப்படும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் இரா. தமிழ்ச்செல்வன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, வருவாய் கோட்டாட்சியா் சுப்பையா, வட்டாட்சியா் பாரதிவளவன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com