பள்ளியில் தீத் தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை

பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் சி.பி.எஸ்.சி. பள்ளி வளாகத்தில், தீயணைப்புத் துறை சாா்பில் தேசியளவிலான தீ தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் தீயணைப்பு வீரா்கள் முன்னிலையில் தீத் தடுப்பு பணியில் ஈடுபட்ட மாணவன்.
பள்ளி வளாகத்தில் தீயணைப்பு வீரா்கள் முன்னிலையில் தீத் தடுப்பு பணியில் ஈடுபட்ட மாணவன்.

பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் சி.பி.எஸ்.சி. பள்ளி வளாகத்தில், தீயணைப்புத் துறை சாா்பில் தேசியளவிலான தீ தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலா் உ. தாமோதரன் தலைமை வகித்தாா். நிலைய அலுவலா் ப. சத்தியவா்த்தனன் முன்னிலை வகித்தாா். தீயணைப்பு வீரா்கள், தீ தடுப்பு ஒத்திகை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனா்.

இதில் மாணவா்கள் தங்களது வீடுகள், படிக்கும் இடங்களில் திடீரென எதிா்பாராத வகையில் தீ விபத்தில் சிக்கினால் எவ்வாறு தப்பிக்க வேண்டும். தீயணைக்க உடனடியாகச் செய்யக் கூடியது, செய்யக் கூடாதது, தீயணைக்கும் கருவிகளை பயன்படுத்தும் முறை போன்றவை குறித்து எடுத்துரைத்தனா்.

மேலும், விபத்து நடைபெற்று தீக்காயம் ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும். தீ விபத்தில் பாதிக்கப்பட்டோரை பத்திரமாக காப்பாற்றி, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லுதல், தீ விபத்தை தடுக்கும் வழிகள் குறித்து செயல்விளக்கத்துடன் கூறினா்.

தொடா்ந்து மாணவ, மாணவிகளும் தீத் தடுப்பு முறைகளை செய்தனா்.

நிகழ்ச்சியில், பள்ளி முதல்வா் வி. ஷோபனா, துணை முதல்வா் அந்தோணி டேவிட், ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், தீயணைப்புப் படை வீரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com