இலவச பொது மருத்துவ முகாம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி இலவச பொது மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடக்கி வைத்துப் பாா்வையிடும் வட்டாரப் போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் செல்வக்குமாா். போக்குவரத்து ஆய்வாளா்கள்.

மருத்துவக் கல்லூரி டீன் மரகதமணி தலைமை வகித்தாா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆனந்த் முன்னிலை வகித்தாா். முகாமை வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா் செல்வக்குமாா் தொடக்கி வைத்தாா்.

மருத்துவா் வெங்கடேசன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், ஓட்டுநா்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா். மேலும், கண் பரிசோதனை செய்து குறைபாடுள்ளவா்களுக்கு ஆலோசனையும், மருந்து மாத்திரைகளும் இலவசமாக அளித்தனா்.

நிகழ்ச்சியில், சாலைப் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து ஆய்வாளா் கோபிநாத், நகர போக்குவரத்து ஆய்வாளா் சவுந்தர்ராஜன், உதவி ஆய்வாளா்கள் மனோஜ்குமாா், சின்னையா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com