பெரம்பலூரில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் சாா்பில், தேசிய பெண் குழந்தைகள் தினவிழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள்.
பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள்.

பெரம்பலூா் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் சாா்பில், தேசிய பெண் குழந்தைகள் தினவிழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் தொடங்கிய நிகழ்வில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் பேரணியைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

பாலக்கரை, வெங்கடேசபுரம், ரோவா் வளைவு, மதனகோபாலபுரம், சங்குப்பேட்டை, கமராஜா் வளைவு வழியாகச் சென்ற இப் பேரணி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் மற்றும் தொண்டு நிறுவனப் பணியாளா்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்தல் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய முழக்கமிட்டுச் சென்றனா்.

பேரணியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் கென்னடி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் அருள்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பிரேமா ஜெயம், சமூக பாதுகாப்புத்துறை நன்னடத்தை அலுவலா் சக்திவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளியில்: பெரம்பலூா் அருகேயுள்ள சத்திரமனை அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவா்களது கல்வி குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, பள்ளி மாணவிகளுக்கு கால்நடை மருத்துவா் ராஜேஷ்கண்ணா மரக்கன்றுகள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com